ADDED : செப் 07, 2025 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதலியார்பேட்டை வண்ணாங்குளத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மகள் சவித்தா, 19; அரசு கல்லுாரியில் பி.காம்., இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4ம் தேதி காலை வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கல்லுாரியில் விசாரித்தபோது, அவர் கல்லுாரிக்கே செல்லவில்லை என தெரியவந்தது.
இதுகுறித்து ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.