/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேட்பு மனு தாக்கல் துவக்கம் முதல் நாளில் 'ஜீரோ' வெள்ளிக்காக 'வெயிட்டிங்'
/
வேட்பு மனு தாக்கல் துவக்கம் முதல் நாளில் 'ஜீரோ' வெள்ளிக்காக 'வெயிட்டிங்'
வேட்பு மனு தாக்கல் துவக்கம் முதல் நாளில் 'ஜீரோ' வெள்ளிக்காக 'வெயிட்டிங்'
வேட்பு மனு தாக்கல் துவக்கம் முதல் நாளில் 'ஜீரோ' வெள்ளிக்காக 'வெயிட்டிங்'
ADDED : மார் 21, 2024 12:32 AM

புதுச்சேரி : சுபமுகூர்த்த நாளாக இருந்தாலும் முதல்நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. முதல்நாளான நேற்று முகூர்த்த நாளாக இருந்தாலும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான படிவம், கடந்த 18ம் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் 14 பேரும், நேற்று 11 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை பெற்று சென்றுள்ளனர்.
நான்காவது சனிக் கிழமையான வரும் 23ம் தேதியும், ஞாயிற்றுகிழமையான 24ம் தேதியும் வேட்பு மனுக்கள் பெறப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவிர 24ம் தேதி பிறகு வருகின்ற நாட்கள் தேய்பிறையாக உள்ளது. தேய்பிறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். எனவே வளர்பிறை நாட்களான இன்றும் 21ம் தேதியும், நாளை 22ம் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வெள்ளிக்கு காத்திருப்பு
குறிப்பாக ஜோசியர்கள் குறித்து கொடுத்துள்ளபடி வெள்ளிக்கிழமையான 22ம் தேதி பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.வரும் 27ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளது. காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இந்த வேட்பு மனுக்கள் மீது 28ம் தேதி பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 30ம் தேதி இறுதி காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு வேட்பாளருடன் ஒருவர் முன்மொழிவு செய்யலாம். மற்ற வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிவு செய்ய வேண்டும். முன்மொழிவு செய்யபவர்கள் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் கட்டாயமாக வாக்காளர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டியிட விரும்பும் வேட்பாளர் தனியாகவோ அல்லது அல்லது முகவருடன் இணைந்தோ வங்கி கணக்கு ஆரம்பித்து இருக்க வேண்டும். அத்துடன் 25 ஆயிரம் ரூபாய் டிபாசிட் தொகை செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.,பிரிவு வேட்பாளர்கள் 12,500 ரூபாய் செலுத்தினால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

