/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க இரு மாநில அரசுகள் ஆலோசனை கூட்டம்
/
பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க இரு மாநில அரசுகள் ஆலோசனை கூட்டம்
பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க இரு மாநில அரசுகள் ஆலோசனை கூட்டம்
பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க இரு மாநில அரசுகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 13, 2024 06:54 AM
புதுச்சேரி : ஊசுட்டேரியில் வனவிலங்கு, பறவைகள் வேட்டை தடுக்க இருமாநில அரசுகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என வனப் பாதுகாவலர் அருள்ராஜன் தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி என இரு மாநிலங்களால் பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுட்டேரியில் நேற்று முன்தினம் வனவிலங்குகள்,பறவைகள் கொன்று குவிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள நரி, புணுகு பூனை, பழம் தின்னி வவ்வால் உள்ளிட்ட 12 பாலூட்டிகள் இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் இரண்டு கூண்டுகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 75 கிளிகள், உடும்புகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது.இரு மாநில பரப்புகளில் ஊசுட்டேரி அமைந்துள்ளதால், வேட்டை கும்பலை கண்காணித்து பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, கொல்லப்பட்ட பறவைகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ல் அட்டவணை செய்யப்பட்டுள்ளன.
பறவையின் இறைச்சியை வாங்குவது தவறு. பறவைகள் வேட்டையாடப்படுவதால் கடும் பாதிப்புமனிதர்களுக்குதான். பறவை இறைச்சியை விற்பதும், வாங்குவதும் சட்டப்படி தவறு. சரணாலயத்தை ஒட்டிய பகுதிகளில் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றனர்.
புதுச்சேரி வனப் பாதுகாவலர் அருள்ராஜன் கூறும் போது, வேட்டையாடுவதைத் தடுக்க போதிய பணியாளர்கள் இல்லை. இந்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம் என்றுதெரிவித்தார்.

