நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார், : திருக்கனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் இன்று நடக்கிறது.
திருக்கனுார்- மண்ணாடிப்பட்டு செல்லும் சாலை சிவன் கோவில் பின்புறம் புற்றுவடிவிலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 19ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் இன்று(12ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, நேற்று மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா, இரவு 12:00 மணிக்கு சிவன் பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று(12ம் தேதி) பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4:30 மணிக்கு மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.

