/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஐ., பணி விண்ணப்பங்களை திருத்தம் செய்ய அவகாசம்
/
எஸ்.ஐ., பணி விண்ணப்பங்களை திருத்தம் செய்ய அவகாசம்
ADDED : செப் 07, 2025 06:45 AM
புதுச்சேரி : சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வரும் 17 ம் தேதிக்குள் திருத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் சிறப்பு அதிகாரி ஏழுமலை செய்திக்குறிப்பு:
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 70 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12ம் தேதி வெளியிடப்பட்டது.
கடந்த 8.11.2022 அன்று சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மற்றும் பணியில் உள்ள காவல் துறையினருக்குமான விரிவான வழிமுறைகள், புதுச்சேரி அரசின் ஆட்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட விண்ணப்பதாரர்கள், தங்கள் சாதி, தகவல் தொடர்புக்கான குடியிருப்பு முகவரி, நிரந்தர முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமெனில், வரும் 6ம் தேதி காலை 10:00 மணி முதல் வரும் 17ம் தேதி மாலை 3:00 மணி வரை திருத்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.