/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்று பெண்களிடம் ரூ.16.81 லட்சம் மோசடி
/
மூன்று பெண்களிடம் ரூ.16.81 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 01, 2025 02:16 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 3 பெண்கள் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.16.81 லட்சம் இழந்துள்ளனர்.
ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் பகுதிநேர வேலையாக வீட்டில் இருந்து ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியள்ளார். இதைநம்பி, அப்பெண் பல்வேறு தவணையாக 13 லட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். பின், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன் மூலம் வந்த பணத்தை, தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், மூலக்குளத்தை சேர்ந்த பெண் 96 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த பெண், 2 லட்சம் என 3 பெண்கள் சைபர் மோசடி கும்பலிடம் 16 லட்சத்து 81 ஆயிரத்து 514 ரூபாய் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.