/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்னை ஐகோர்ட் நீதிபதி காலாப்பட்டு சிறையில் ஆய்வு
/
சென்னை ஐகோர்ட் நீதிபதி காலாப்பட்டு சிறையில் ஆய்வு
ADDED : ஜூலை 01, 2025 02:14 AM

புதுச்சேரி : 'சென்னை ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி, காலாப்பட்டு மத்திய சிறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். சென்னை ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி நேற்று காலாப்பட்டு சிறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்தன், புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா உடனிருந்தனர். சிறைவாசிகள் செய்யும் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்புகள், ஜெயில் ரேடியோ, பேக்கரி யூனிட் மற்றும் சிறை நுாலகம் ஆகியவற்றை நீதிபதி பார்வையிட்டு, கைதிகளோடு கலந்துரையாடி, சிறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். சிறைத்துறையை பாராட்டினார்.
நீதிபதி புகழேந்தி, சிறைவாசிகளிடம் பேசுகையில் '' நீங்கள் செய்யும் குற்றங்களினால் நீங்களும், உங்கள் குடும்பத்தார் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உங்களால் பாதிக்கப்பட்ட குடும்பமும் பெருந்துயரத்தை அனுபவிக்கின்றனர். எனவே, குற்றச் செயலில் ஈடுபடாமல் நல்ல ஒரு மனிதனாக சமுதாயத்தில் இருக்க வேண்டும். சிறையில் தங்களை நல்வழிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை பயன்படுத்தி, குற்ற உணர்விலிருந்து வெளிப்பட்டு நல்ல ஒரு மனிதனாக வெளியே செல்ல வேண்டும் என்றார்.''
முன்னதாக, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறைவாசிகளை நல்வழிப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.