/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி மாயமான விவகாரம் எம்.எல்.ஏ., டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்
/
சிறுமி மாயமான விவகாரம் எம்.எல்.ஏ., டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்
சிறுமி மாயமான விவகாரம் எம்.எல்.ஏ., டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்
சிறுமி மாயமான விவகாரம் எம்.எல்.ஏ., டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்
ADDED : மார் 05, 2024 04:51 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமியை விரைவாக கண்டுபிடிக்க பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., டி.ஜி.பி.யை சந்தித்து வலியுறுத்தினார்.
முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த நாராயணன் மகள் ஆர்த்தி, 9: கடந்த 2ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானார். முத்தியால்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., நேற்று போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவாசை சந்தித்து பேசினார்.
அப்போது, மாயமான சிறுமியை உடனடியாக கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை மாயமாகும் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முத்தியால்பேட்டை தொகுதி முழுதும் சி.சி.டி.வி. கேமரா பொறுத்த வேண்டும் என வலியுத்தினார்.
சிறுமி விரைவில் மீட்கப்படுவார். முத்தியால்பேட்டை முழுதும் சி.சி.டி.வி. பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் உறுதி அளித்தார்.