/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருப்பதி சென்ற கணவர் மனைவி போலீசில் புகார்
/
திருப்பதி சென்ற கணவர் மனைவி போலீசில் புகார்
ADDED : மார் 11, 2024 05:23 AM
திருக்கனுார் : கணவர் திருப்பதிக்கு சென்றது தெரியாமல், மனைவி போலீசில் கணவரை காணவில்லை என புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு டி.வி.மலை ரோட்டை சேர்ந்தவர் முருகன், 51; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் (9ம் தேதி) காலை 9:00 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவு வரை வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கலைவாணி தனது கணவரை காணவில்லை என திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து முருகனை தேடி வந்தனர். இந்நிலையில், முருகன் நேற்று(10ம் தேதி) காலை வீட்டிற்கு வந்தார். தகவலறிந்த போலீசார் வீட்டிற்கு சென்று அவரிடம் நடத்திய விசாரணையில், முருகன் நேற்று முன்தினம் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென திருப்பதிக்கு சென்று விட்டு காலையில் வந்ததாக தெரிவித்தார்.
வீட்டில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்த சம்பவம் திருக்கனுார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

