/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : மார் 04, 2024 05:35 AM

திருக்கனுார் : பி.எஸ்.பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி அரசு பள்ளி கல்வி துறை வட்டம் நான்கு அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து, கேரம், கபடி, கோகோ, செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா பி.எஸ்.பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சபாபதி வரவேற்றார்.
புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நல துறை இயக்குனர் செந்தில்குமார், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
திட்ட பொறுப்பாளர் வைத்தியநாதன், சிவகுமார் வாழ்த்தி பேசினர்.
விழாவில், அரசு மற்றும் பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
உடற்கல்வி ஆசிரியர் கருணை பிரகாசம் நன்றி கூறினார்.

