ADDED : செப் 25, 2025 03:51 AM

திருக்கனுார் : திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பெண்களுக்கான சுகாதார சிறப்பு முகாம் நடந்தது.
செவிலிய அதிகாரி மல்லிகா வரவேற்றார். சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி (பொ) சுஷ்மிதா தலைமை தாங்கி, பெண்களுக்கான சுகாதார சிறப்பு முகாமை துவக்கி வைத்து, காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
முகாமில், மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு ரத்தசோகை, காசநோய், மகப்பேறு, தோல், காது, மூக்கு, தொண்டை, பல், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஆயுஷ், குழந்தை நல மருத்துவம், மனநலம், உடல் பருமன் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளித்தனர். காசநோய் மேற்பார்வையாளர் பொற்கிலை காசநோய்க்கான அறிகுறிகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
கிராமபுற செவிலியர் ஹேமலதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை செவிலியர்கள் பனிமலர், அஞ்சனா உட்பட பலர் செய்திருந்தனர்.