/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச மெமரி சாம்பியன் பட்டம் வென்றவர் கவர்னரிடம் வாழ்த்து
/
சர்வதேச மெமரி சாம்பியன் பட்டம் வென்றவர் கவர்னரிடம் வாழ்த்து
சர்வதேச மெமரி சாம்பியன் பட்டம் வென்றவர் கவர்னரிடம் வாழ்த்து
சர்வதேச மெமரி சாம்பியன் பட்டம் வென்றவர் கவர்னரிடம் வாழ்த்து
ADDED : செப் 25, 2025 03:50 AM

புதுச்சேரி : பிலிப்பைன்ஸ் சர்வதேச ஓபன் மெமரி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற விஷ்வா ராஜ்குமார், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
7வது பிலிப்பைன்ஸ் சர்வதேச ஓபன் மெமரி சாம்பியன்ஷிப் போட்டி, பிலிப்பைன்சின் மணிலாவில் கடந்த 20ம் தேதி நடந்தது. இப்போட்டியில், 5 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.அதில், புதுச்சேரியை சேர்ந்த விஷ்வா ராஜ்குமார், தங்கப் பதக்கம் மற்றும் சாம்பியன் பட்டம் வென்றார்.
மேலும், மெமரி போட்டியில் உலகின் தலைசிறந்த மங்கோலியன் நாட்டு போட்டியாளரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை விஷ்வா ராஜ்குமார் பெற்றார். இதையடுத்து, சாம்பியன் பட்டம் வென்ற அவர், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதில், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.