/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்பாக்கி சுடும் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
/
துப்பாக்கி சுடும் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
துப்பாக்கி சுடும் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
துப்பாக்கி சுடும் போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை
ADDED : அக் 24, 2024 06:06 AM

புதுச்சேரி: தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னை 15வது தென் மண்டல அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி நடந்தது. இதில், புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், புதுச்சேரி மாநில ஒலிம்பியன் ஏர் ரைபிள் அகாடமி சார்பில் பங்கேற்ற சத்தியபுவனம், 10 மீட்டர் கைத்துப்பாக்கி பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோல், 10 மீட்டர் ரைபிள் பெண்கள் பிரிவில் கமலிகா ராமகிருஷ்ணன், இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு ஒலிம்பியன் ஏர் ரைபிள் அகாடமி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.