/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜவிசுவாசம் நாராயணசாமியின் கண்ணை மறைக்கிறது செல்கணபதி எம்.பி., தாக்கு
/
ராஜவிசுவாசம் நாராயணசாமியின் கண்ணை மறைக்கிறது செல்கணபதி எம்.பி., தாக்கு
ராஜவிசுவாசம் நாராயணசாமியின் கண்ணை மறைக்கிறது செல்கணபதி எம்.பி., தாக்கு
ராஜவிசுவாசம் நாராயணசாமியின் கண்ணை மறைக்கிறது செல்கணபதி எம்.பி., தாக்கு
ADDED : ஏப் 18, 2025 04:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசியலிலும் நாராயணசாமி ஜொலிக்கப் போவது இல்லை என பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதிஎம்.பி., தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது.மோடி அரசு நேரு குடும்பத்தை அழிக்க முயல்கிறது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.
அவர் நேரு குடும்ப விசுவாசியாக தொடர முயற்சிக்கிறார். ஆனால், நேரு குடும்பம் அவரை எப்போதோ அந்தப் பட்டியலில் இருந்து விடுவித்துவிட்டது.
புதுச்சேரி அரசியலிலும் அவர் ஜொலிக்கப் போவது இல்லை.நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் கோர்ட் உத்தரவுப்படி அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 441 கோடி ரூபாய் ராகுல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார். பொது நிறுவனமான ஏ.ஜெ.எல்., பங்குதாரர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
வரும் 21ம் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை வேகம் எடுக்கப் போகிறது. முதல் குற்றவாளியாக சோனியாவும், 2வது குற்றவாளியாக ராகுலும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் இப்போது இவர்கள் இருவரும் ஜாமினில்தான் இருக்கின்றனர். விரைவில் கோர்ட் உத்தரவுப்படி மீண்டும் சிறைக்குச் செல்வார்கள். சட்டம் படித்திருந்தும், ராஜ விசுவாசம் காரணமாக அவருக்கு உண்மை கண்ணை மறைக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

