/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாசவி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
வாசவி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 26, 2026 04:23 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வாசவி சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறி வியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில், மழலையர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் மாரிமுத்து தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் செந்தில்ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவர் சதீஷ் கலந்து கொண்டார்.
கண்காட்சியில், வனவிலங்கு, திருவிழாக்கள், போக்குவரத்து சாதனங்கள் குறித்து மழலையர் வகுப்பு மாணவர்களும், தஞ்சாவூர் கோவில், வ.உ.சி. கப்பல், திருவள்ளுவர் சிலை ஆகியவை குறித்து துவக்கப்பள்ளி மாணவர்களும் காட்சிப்படுத்தினர்.
நடுவராக, புதுச்சேரி ஆசிரியர் பட்டயப் பயிற்சி விரிவுரையாளர் ஆறுமுகம், சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார். அதனையடுத்து, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சுஜாதா நன்றி கூறினார்.

