/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நல்லுார் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
நல்லுார் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 07, 2025 12:47 AM

திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
துவக்க விழாவில் தலைமையாசிரியர் ரேவதி வரவேற்றார். கல்வித்துறை 5ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன்தலைமை தாங்கி, கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் 70 படைப்புகள் இடம் பெற்றன.
முக்கிய படைப்புகளாக விபத்தினை தடுக்கும் கருவி, கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்,கண் வேலை செய்யும் விதம், நீர் சுழற்சி, தாவரங்களின் ஒளிச்சேர்க்கைமற்றும் மூலிகை தோட்டம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர் பார்வையிட்டனர்.

