/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கம்யூ., நகர குழு கூட்டம்
/
இந்திய கம்யூ., நகர குழு கூட்டம்
ADDED : நவ 07, 2025 12:47 AM
புதுச்சேரி: இந்திய கம்யூ., நகர குழு கூட்டம் தனியார் கம்பெளக்ஸ் வளாகத்தில் நடந்தது.
இன்பமொழி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜீவானந்தம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், மாநில பொருளாளர் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
சிவகுருநாதன், ஆனந்து, ஜீவானந்தம், சசி, ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், லதா, முத்துலட்சுமி, ஜோசப், தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுச்சேரி பெரிய மார்கெட் வியாபாரம் செய்யும் இடங்களை நீதிமன்றம் உத்தரவுப்படி கொஞ்ச கொஞ்சமாக இடிப்பதை கண்டிப்பது. இதற்கு வியாபாரிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.
குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்.
முத்தியால்பேட்டையில் கோவில் அருகில் மதுபான கடை வைக்க அனுமதிக்கக்கூடாது.
நகரப் பகுதியில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

