/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆவணம் சமர்ப்பித்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
போலி ஆவணம் சமர்ப்பித்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
போலி ஆவணம் சமர்ப்பித்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
போலி ஆவணம் சமர்ப்பித்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : நவ 13, 2024 08:59 PM
புதுச்சேரி; என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்டாக் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு இடங்களுக்கு போலி ஆவணம் சமர்ப்பித்த 49 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீடு, இந்திய கல்வி முறைக்கு பயனளிக்காத ஒன்று. புதுச்சேரியில் என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி வந்தேன். ஆனால், சென்டாக் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது போலி சான்றிதழ்கள் மூலம் 49 மாணவர்கள் சீட் பெற்றுள்ளனர்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். அதிகாரிகள், என்.ஆர்.ஐ. சான்றிதழ்களை உரிய ஆவணம் இன்றி போலி சான்றிதழ் வழங்கினர் என்பதை விசாரித்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.