/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் குறித்து விளக்கம் அளிக்க கோரிக்கை
/
சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் குறித்து விளக்கம் அளிக்க கோரிக்கை
சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் குறித்து விளக்கம் அளிக்க கோரிக்கை
சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் குறித்து விளக்கம் அளிக்க கோரிக்கை
ADDED : அக் 09, 2024 11:02 PM
புதுச்சேரி: சி.பி.எஸ்.இ., அரசுப் பள்ளிகளில் இணைப்பு அங்கீகாரம் குறித்து கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் அறிக்கை:
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் அனுப்பினார். அதில், மாநிலத்தில் உள்ள 127 அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.இ., முறைக்கு மாற்றி இணைப்பு வழங்க வேண்டி தாங்கள், கடந்த 29.12.2022 தேதி கடிதம் அனுப்பினீர்கள்.
அதன்பேரில், சி.பி.எஸ்.இ., இணைப்பு கேட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட 127 பள்ளிகளின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 126 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., முறைக்கு மாற்றி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 பள்ளிக்கு முழுமையற்ற விண்ணப்பம் சமர்பித்ததால் இணைப்பு வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு பெற உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியதற்கு இதுவரை பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., இணைப்புப் பெறாத அந்த ஒரு அரசு பள்ளி எது? அப்பள்ளியின் நிலை என்ன. அப்பள்ளி மாணவர்கள் இந்தாண்டு பொதுத் தேர்வு எழுத முடியுமா? அப்பள்ளி சி.பி.எஸ்.இ., இணைப்புப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை, பள்ளிக் கல்வித்துறை உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

