/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மாணவர் காங்., கையெழுத்து இயக்கம்
/
புதுச்சேரி மாணவர் காங்., கையெழுத்து இயக்கம்
ADDED : ஆக 25, 2025 05:29 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாணவர் காங்., சார்பில், நடந்த கையெழுத்து இயக்கத்தை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.
காங்., கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கையெழுத்து இயக்கத்தை, முன்னாள் முதல்வர் நாராணயசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வைத்தியநாதன், எம்.எல்.ஏ., முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உட்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, ஓட்டு திருட்டு என்ற தலைப்பில் நடந்த கையெழுத்து இயக்கத்தில், அஞ்சல் அட்டை மூலம் கட்சியினரிடம் கையெழுத்து வாங்கி, குடியரசு தலைவருக்கு அனுப்பினர்.
அதில், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். போலி வாக்காளர்கள் மூலம் வாக்கு திருட்டு நடப்பதை தடுக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், சுதந்திரமாகவும், நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும். என, அஞ்சல் அடையில் எழுதி அனுப்பினர்.
மாநில மாணவர் காங்., தலைவர் அஷவர்தன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.