/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
/
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : ஆக 25, 2025 05:28 AM
புதுச்சேரி : அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து, பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மூலம் வரும் வீடியோ அழைப்புகளுக்கு, பதில் அளிக்க வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறிமுகமில்லாத நபர்கள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம் போன்றசமூக வலைதளங்கள் மூலம் வரும் வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். அழைப்பை ஏற்றால், வீடியோ ரெ க்கார்டு செய்யப்பட்டு நீங்கள் மிரட்டப்படுவீர்கள்.
சமூக வலைதளங்கல் மூலம் நட்பாக பழகி விலை உயந்த பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறினால், அதனை நம்பி பணத்தை முதலீடு செய்தால் ஏமாற்றபடுவீர்கள்.
கடன் 'ஆப்' மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி, உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால், அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
சமூக வலைதளங்கள் மூலமாக உங்களுக்கு குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்து தருகிறோம் என்று கூறினால் பணம் முதலீடு செய்யாதீர்கள்.
வீட்டிலிருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும், பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்றுகூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
சமூக வலைதளங்களில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால், அதனை நம்பாதீர்கள்.இதனால் உங்களை போலீஸ் கைது செய்ய நேரிடும்.
உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி 'வாட்ஸ் ஆப்' மூலம் ஏதேனும் லிங்க் மற்றும் ஆப் மெசேஜ் வந்தால் அதனை 'கிளிக்' செய்யாதீர்கள். இதுபோன்று தொடர்பு கொள்ளும் நபர்களை உறுதிப்படுத்தாமல் எந்த செயலையும்செய்ய வேண் டாம்.
மேலும், இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும். அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால், சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413--2276144 / 9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.in என்ற வெப்சைட்டில் புகார் அளிக்கலாம்.