/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியோர் ஓய்வூதிய திட்டம் புதுச்சேரி அரசு அதிரடி
/
முதியோர் ஓய்வூதிய திட்டம் புதுச்சேரி அரசு அதிரடி
ADDED : ஜூலை 24, 2025 03:40 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கான தகுதியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அங்கன்வாடி ஊழியர்கள் வீடு வீடாக சென்று சரி பார்க்க உள்ளனர்.
அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை முதியோர் ஓய்வூதியர் பிரிவு செய்திக்குறிப்பு;
முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கான தகுதியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அங்கன்வாடி ஊழியர்கள் வீடு வீடாக சென்று சரிபார்க்க உள்ளனர்.
புதுச்சேரி அரசு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, புதுச்சேரி முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெரும் பயனாளிகளின் தகுதியை மதிப்பீடு செய்ய வீடு வீடாக சென்று சமூக ஆய்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், தகுதியற் ற ஓய்வூதியம் பெறுபவர்கள் அடையாளம் காணப்படுவர். இதன் ஒரு பகுதியாக, தற்போதைய ஓய்வூதியர்களின் பட்டியல் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்கள், சமூகக் கூடங்கள், மற்றும் அங்கன்வாடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படும். பொதுமக்கள் தகுதியற்ற நபர்கள் குறித்து அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தெரிவிக்கலாம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பயனடைந்து வரும் முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகிய ஓய்வூதியம் பெறும் அனைத்து பயனாளிகள் தங்களது வாழ்வாதார சான்றிதழை ஜூலை 24 முதல் ஆக., 18ம் தேதிக்குள் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.