/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவக் கல்லுாரியில் சீர்கேடு போராட்டம் நடத்த காங்., முடிவு
/
அரசு மருத்துவக் கல்லுாரியில் சீர்கேடு போராட்டம் நடத்த காங்., முடிவு
அரசு மருத்துவக் கல்லுாரியில் சீர்கேடு போராட்டம் நடத்த காங்., முடிவு
அரசு மருத்துவக் கல்லுாரியில் சீர்கேடு போராட்டம் நடத்த காங்., முடிவு
ADDED : ஆக 01, 2025 02:24 AM
புதுச்சேரி: இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி அளித்த வாக்குறுதிகளில், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. கடந்த 29ம் தேதி நடந்த அரசு விழாவில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.
ஒருபுறம் மத்திய அரசு நிதி தரவில்லை என்கிறார். ஆனால் நிதியே இல்லாமல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுவிட்டு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என, அவர் மீது பழி போடுகிறார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராஜிவ் வர்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில், கொல்லைப்புற வழியாக பணியில் சேர்க்கப்பட்ட 800 பேரை கடந்த 2021ல் முதல்வர் ரங்கசாமி பணி நிரந்தரம் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2019ம் ஆண்டிற்கு பிறகு விதிமுறைகளுக்கு உட்பட்டே பணியாளர்ளை நியமிக்க வேண்டும். மீறினால் அது கோர்ட் அவமதிப்பு என கூறியுள்ளது.
அதனை மீறி, 2021ல் முதல்வர் ரங்கசாமி, பணி நிரந்தர ஆணை வழங்கியுள்ளார். இந்த கோப்பு அப்போதைய தலைமை செயலர் ராஜிவ் வர்மாவிற்கு அனுப்பாமல், நேரடியாக அப்போதைய கவர்னர் தமிழிசையிடம் ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிட்டுள்ளதாக, ராஜிவ் வர்மா தெரிவித்துள்ளார். இதற்கு முதல்வரும், முன்னாள் கவர்னரும் உயர்நீதிமன்றத்தில் பதில் கூறியாக வேண்டும்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் கடந்தாண்டு 10 ஆயிரத்து 54 மாணவர் பள்ளியில் இருந்து இடை நின்றுள்ளனர். இதை அரசு சரி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு தார்மீக பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அங்கு முதல்வரால் பணியமர்த்தப்பட்டவர்கள் வேலை செய்வதில்லை. இதுகுறித்து நான், மருத்துவக் கல்லூரி இயக்குனருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளேன். குறைபாடுகளை 15 நாளில் சரி செய்யவில்லை எனில் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.