/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வளர்ச்சி பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
/
வளர்ச்சி பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
வளர்ச்சி பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
வளர்ச்சி பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை
ADDED : ஆக 01, 2025 02:25 AM

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன், எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீர செல்வத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, வில்லியனுார் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டையில் குளம் கட்டுதல், நீர்ப்பாசன வாய்க்கால் மீது கான்கிரீட் சுவர் எழுப்புதல், சாலை அமைத்தல், பயணியர் நிழற்குடை, வில்லியனுார் கஸ்துாரிபாய் திருமண நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல், வில்லியனுார் நான்கு மாட வீதிகளில் உள்ள 'யு' வடிவ வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ஏ.எப்.டி., கூட்டுக்குடிநீர் திட்டத்தில் எஸ்.எம்.வி.புரம் பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்தல், துறை மூலம் அமைக்கப்பட்டு பழுதடைந்த ஹைமாஸ் மற்றும் மினிமாஸ் விளக்குகளை எரிய வைக்க வேண்டும்.
பெரியபேட் வாய்க்கால் கான்கிரீட் சுவர் எழுப்புதல், வி.மணவெளி, ஜி.என்.பாளையம் கிராமத்தில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இப்பணிகளை நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
செயற்பொறியாளர்கள் கஜலட்சுமி, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.