/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலத்தின் மீது தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
/
பாலத்தின் மீது தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
ADDED : பிப் 26, 2024 05:21 AM

மின்தடையால் கிராம மக்கள் அவதி
புதுச்சேரி: நான்கு வழிச்சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியில் கண்டெய்னர் லாரிகள் உரசுவதால், அரியூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், அரியூர் கிராமத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதில், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., எதிரில் உள்ள மேம்பாலத்தின் மறுபக்கத்திற்கு மின் கம்பிகள் கடந்து செல்கிறது. இவை தாழ்வாக செல்கின்றன.
மேம்பாலத்தின் மீது உயரமான கண்டெய்னர் லாரிகள் கடக்கும்போது, மின் கம்பியில் உரசுகிறது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
மின்சாரம் அடிக்கடி துண்டித்து மீண்டும் வரும்போது மின் சாதன பொருட்கள் பழுதடைகின்றன.
இதனால், கிராம மக்கள் அவதியடைகின்றனர். எனவே, பாலத்தின் மீது தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயரமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

