/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் நமச்சிவாயம் புத்தாண்டு பரிசு வழங்கல்
/
அமைச்சர் நமச்சிவாயம் புத்தாண்டு பரிசு வழங்கல்
ADDED : டிச 24, 2025 05:18 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம், தனது சொந்த செலவில், புத்தாண்டு பரிசாக சர்க்கரை மற்றும் காலெண்டர் வழங்கினார்.
திருக்கனுார் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தனது சொந்த செலவில் ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 2026ம் ஆண்டிற்கான தினசரி காலண்டரை, மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், அ.தி.மு.க., நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கர் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

