/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா-ராஜிவ் சதுக்கம் இடையே 1,150 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
/
இந்திரா-ராஜிவ் சதுக்கம் இடையே 1,150 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
இந்திரா-ராஜிவ் சதுக்கம் இடையே 1,150 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
இந்திரா-ராஜிவ் சதுக்கம் இடையே 1,150 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
ADDED : செப் 25, 2025 04:14 AM

புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா-ராஜிவ் சதுக்கங்களிடையே மேம்பாலம் கட்டும் திட்டத்திற்க, மத்திய அரசு ரூ.436.18 கோடி நிதியுதவிடன் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட, ராஜிவ் சதுக்கம் முதல் இந்திரா சதுக்கம் வரை மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்காரியை, அமைச்சர் லட்சுமிநாராயணன் நேரில் சந்தித்து, மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நுாறு விழுக்காடு நிதியுதவி கோரினார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக் கம் வரையிலான 3.8 கி.மீ., தொலைவிற்கு மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, ரூ.436.18 கோடி நுாறு விழுக்காடு நிதியுதவிக்கான அனுமதியை மத்திய அரசு நேற்று முன்தினம் வழங்கியுள்ளது.
இந்த மேம்பாலம் இந்திரா சதுக்கத்திற்கு தெற்கே 430 மீட்டர் தொலைவில் தொடங்கி ராஜிவ் சதுக்கத்தில் இருந்து வடக்கில் 620 மீட்டர் தொலைவில் இ.சி.ஆரில் இறங்குகிறது. இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை 1,150 மீட்டர் நீளம், மற்றும் 20.5 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் இந்திரா சதுக்கத்தில் 17 மீட்டர் உள் வட்டமும் மற்றும் 11 மீட்டர் அகலத்திற்கு உயர்நி லை வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்திரா சதுக்கத்தில் இருந்து கிழக்கில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையம் வரை 853 மீட்டர் நீளம் 9 மீட்டர் அகலம் கொண்ட இணைப்பு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், இந்திரா சதுக்கத்தில் இருந்து விழுப்புரம் சாலையில் 300 மீட்டர் நீளத்திற்கும் 9 மீட்டர் அகலத் திற்கும் இணைப்பு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறைஅமைச்சர் லட்சுமிநாராயணன் கூறும்போது, 'இந்த மே ம்பாலம் கட்டுமான பணி டெண்டர் செயல்முறைக்கு பிறகு இந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, 30 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேம்பால திட்டத்திற்கு நிதியுதவியுடன் அனுமதி வழங்கிய பிரதமர் மற்றும் மத் திய அமைச்சர் நிதின்கட்காரி ஆகியோருக்கு முதல்வர் சார்பிலும், புதுச்சேரி அரசு சார்பிலும் நன்றி தெரிவிக்கிறோம்' என்றார்.