/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட 56 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு
/
புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட 56 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு
புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட 56 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு
புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட 56 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு
ADDED : செப் 25, 2025 04:13 AM

புதுச்சேரி : ஆப்பரேஷன் விடியல் நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்ட 56 கிலோ கஞ்சா, சீனியர் எஸ்.பி., கலைவாணன் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்வது தொடர் கதையாக உள்ளது.
புதுச்சேரியில் போதை பொருட்கள் விநியோகம் மற்றும் பயன்படுத்தும் குழுக்களை ஒழிக்க போலீஸ் மூலம் ' ஆப்பரேஷன் விடியல்' துவங்கப்பட்டது.
இதையடுத்து, சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் பெரியக்கடை மற்றும் முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கஞ்சா விற்பனை தொடர்பான 10 வழக்குகளில் 56 கிலோ 156 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கோர்ட்டில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த கஞ்சாவை தீ வைத்து அழிக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில், கோர்ட் குடோனில் இருந்த கஞ்சாவை போலீசார் மீட்டு, வில்லியனுார் அருகே உள்ள துத்திப்பட்டு தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள், போலீசார் மற்றும் போதைப்பொருள் அழித்தல் குழுவினர் முன்னிலையில் கம்பெனியின் பாய்லரில் போட்டு தீ வைத்து எரித்து அழித்தனர். மாசு கட்டுப்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.