ADDED : அக் 27, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:  இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை சார்பில், தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.  ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு செயலாளர் சீனிவான் தலைமை தாங்கினார். தலைவர் சுதாகர் முன்னிலை வகித்தார். சென்னை ஓ.எம்.ஆர்., அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சிறப்பு சிறப்பு அமர்வுகளில் மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.
குறைந்தபட்ச ஊடுருவும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் சேதன் போபலே, தற்போதைய சகாப்தத்தில் இருதய மார்பு அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் பலராமன், ரத்த சோகையை புரிந்து கொள்ளுவது குறித்து டாக்டர் பரத்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்றனர்.

