/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விடுதலை நாள் விழா பந்தல் அமைப்பு
/
விடுதலை நாள் விழா பந்தல் அமைப்பு
ADDED : அக் 27, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:  புதுச்சேரியில் விடுதலை நாள் விழா வரும் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதல்வர் ரங்கசாமி கடற்கரை காந்தி திடலில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதைசெலுத்துகிறார்.
இதையொட்டி, விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலை காந்தி திடல் அருகே பிரம்மாண்ட பந்தல்அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இரவு பகலாக ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சட்டசபை, கவர்னர் மாளிகை, தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி விழாக்கோலம் பூண்டு வருகிறது.

