ADDED : செப் 01, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கார் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
வில்லியனுார் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 39; கார் மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5;௦௦ மணியளவில், வீட்டில் மது போதையில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.