/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஸ், கிரேசி கோல்ஸ் கிரிக்கெட் அணிகள் வெற்றி
/
மாஸ், கிரேசி கோல்ஸ் கிரிக்கெட் அணிகள் வெற்றி
ADDED : செப் 17, 2025 11:31 PM

புதுச்சேரி: பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், நடந்து வரும் கிரிக்கெட் போட்டியில், மாஸ், கிரேசி கோல்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 57வது ஆண்டு டி-20 கிரிக்கெட் போட்டி மேட்டுப்பாளையம் என்.எஸ்.ஜே., மைதானத்தில் கடந்த 24ம் தேதி துவங்கியது. இப்போட்டிகளில் 36 அணிகள் கலந்து கொள்கின்றன.
அதன்படி, கடந்த 7ம் தேதி நடந்த முதல் போட்டியில் மாஸ் அணியும், கபில்தேவ் அணியும் மோதின. அதில், முதலில் ஆடிய மாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தனர். பின்னர், விளையாடிய கபில்தேவ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. மாஸ் அணியின் அஜித்குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து நடந்த 2வது போட்டியில் கிரேசி கோல்ஸ் அணியும், கிரேசி கிரிக்கெட் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த கிரேசி கோல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதில், சந்தோஷ் 53 ரன்கள் எடுத்தார். பின்னர், விளையாடிய கிரேசி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.