/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில்
/
கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில்
ADDED : நவ 16, 2024 02:15 AM
வெளிநாட்டு சுற்றுலா பயணி வீசியது அம்பலம்
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில் வீசியது, வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி என தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள பிரசாத தொன்னைகள் வீசும் குப்பை தொட்டியில் காலி வெளிநாட்டு மது பாட்டில்கள் 2 கிடந்தன. அதனை கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் கோவில் சுகாதார ஊழியர் துாக்கி சென்று வெளியில் உள்ள குப்பை தொட்டியில் வீசினார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. கோவில் நிர்வாகம் குப்பை தொட்டியில் மதுபாட்டில் வீசியது யார் என விசாரித்தது. கோவில் வளாக சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோவிலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி, தன் பையில் வைத்திருந்த 2 காலி மதுபாட்டில்களை கோவில் வளாக குப்பை தொட்டியில் போடுவது பதிவாகி இருந்தது. இதுபோன்ற செயல் இனி நடைபெறாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

