ADDED : ஜன 26, 2026 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் லாரி மோதி தனியார் பள்ளி வாகனம் சேதமடைந்தது. மாணவர்கள் காயமின்றி உயிர்தப்பினர்.
காரைக்கால் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனம் நேற்று காலை மாணவர்களை அழைத்து கொண்டு கோட்டுச்சேரி ராயன்பாளையம் பகுதியிலிருந்து பிரதான பாரதியார் சாலையில் சென்றபோது அதிவேகமாக வந்த லாரி தனியார் பள்ளி வாகனம் மீது மோதியது.
இதில் முன்பக்கம் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. வேனில் பயணம் செய்த 10க்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் இன்றி உயிர்தப்பினர்.
தகவல் அறிந்த நகர போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

