ADDED : ஜன 26, 2026 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் காரில் மதுப்பாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நகர் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து சென்றனர்.
இடும்பன் செட்டியார் சாலை வழியாக வந்த டாடா இண்டிகா காரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர்.
அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், காரில் மது கடத்தி வந்தது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, வெள்ளைக்குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம், 40, என்பது தெரிய வந்தது.
அவரிடம் ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள 103.68 லிட்டர் மதுபானங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரின் பதிவெண் போலி எனத் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்தனர்.

