sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.ஆர்.டி.சி.,யில் 'சிட்டி டூர் பஸ்' அறிமுகம்; ரூ.150 கட்டணத்தில் 21 இடங்களை ரசிக்கலாம்

/

பி.ஆர்.டி.சி.,யில் 'சிட்டி டூர் பஸ்' அறிமுகம்; ரூ.150 கட்டணத்தில் 21 இடங்களை ரசிக்கலாம்

பி.ஆர்.டி.சி.,யில் 'சிட்டி டூர் பஸ்' அறிமுகம்; ரூ.150 கட்டணத்தில் 21 இடங்களை ரசிக்கலாம்

பி.ஆர்.டி.சி.,யில் 'சிட்டி டூர் பஸ்' அறிமுகம்; ரூ.150 கட்டணத்தில் 21 இடங்களை ரசிக்கலாம்


ADDED : மார் 02, 2024 06:22 AM

Google News

ADDED : மார் 02, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் ரூ. 150 கட்டணத்தில், 21 சுற்றுலா தளங்களை கண்டு மகிழ பி.ஆர்.டி.சி. சிட்டி டூர் பஸ்களை அறிமுகம் செய்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழும் வகையில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் (பி.டி.டி.சி.) மூலம் கடந்த பல ஆண்டிற்கு முன்பு சிட்டி டூர் பஸ் இயக்கப்பட்டது.

நாளடைவில் உரிய பராமரிப்பு இல்லாததால் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில், பி.ஆர்.டி.சி.யில் இயக்கப்பட்ட 5 மினி பஸ்கள், சிட்டி டூர் என்ற சுற்றுலா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அடர் சிவப்பு நிறம் பூசப்பட்டுள்ள இந்த பஸ்கள் ஹோப் ஆன், ஹோப் ஆப் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. ரூ. 150 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றால், புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள 21 சுற்றுலா தளங்களை இந்த பஸ்சில் பயணித்து கண்டுரசிக்கலாம்.

புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ் முதலில் தாவரவியல் பூங்கா, துாய இருதய ஆண்டவர் பசிலிகா, பாண்டி மெரினா, பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம், அரவிந்தோ சொசைட்டி காகிதம் தயாரிப்பு நிறுவனம், முருங்கப்பாக்கம் கைவினை கிராமம், அரிக்கன்மேடு, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம், தவளக்குப்பம் சிங்கிரிக்குடி லட்சுமிநரசிம்மர் கோவில், திருக்காஞ்சி கங்கைவராக நதிஸ்வரர், வில்லியனுார் அன்னை ஆலயம், திருக்காமீஸ்வரர் கோவில், ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம், பாண்லே பால் பண்ணை, ஆரோவில் மாதீர்மந்தீர், ஆரோவில் கடற்கரை, காமராஜர் மணிமண்டபம், லாஸ்பேட்டை அப்துல்கலாம் அறிவியல் கோளரங்கம் ஆகிய இடங்களை பார்த்து மகிழலாம்.

இதற்கான டிக்கெட்டுகள் பி.ஆர்.டி.சி. புக்கிங் கவுண்டர்களிலும், ஆன்லைன் மூலம் கிடைக்கிறது. பஸ் பர்மீட் பணிகள் நடப்பதால், ஓரிரு நாட்களில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு 0413-2200674 என்ற எண் ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us