ADDED : ஆக 25, 2025 11:22 PM

காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட இந்திய கம்யூ., கட்சியின் மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.
மாநாட்டில் புண்ணியமூர்த்தி செங்கொடி ஏற்றினார். இந்திய கம்யூ., புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கி துவக்கவுரையாற்றினார். கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா மாநாட்டில் அறிக்கையை வாசித்தார். இதில் 11பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மாவட்ட செயலாளராக பக்கிரி சாமி, துணை செயலாளர்களாக குமார், வீரராகவன், பொருளாளராக சங்கர் தேர்வு செய்யப்பட்டனர். மாநட்டில் ரெஸ்டோ பார் மற்றும் ஹோட்டலில் பார் இயங்கும் நேரத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும், மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக் கூடாது.
100 நாள் உறுதி திட்ட வேலையை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உரிய காலத்தில் பாட புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.