/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவிஞருக்கு கவர்னர் பாராட்டு
/
புதுச்சேரி கவிஞருக்கு கவர்னர் பாராட்டு
ADDED : நவ 04, 2025 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கவிஞருக்கு பாராட்டு சான்றிதழை, தமிழக கவர்னர் ரவி வழங்கினார்.
தமிழக கவர்னர் மாளிகையில் இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உதயநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், தமிழ் வளர்ச்சிக்காக இலக்கியத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக, புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலரும், கவிஞருமான பாலசுப்ரமணியனுக்கு பாராட்டு கேடயத்தை கவர்னர் ரவி வழங்கினார்.

