/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ெஹலிகாப்டரில் பறந்து கவர்னர் ஆய்வு
/
ெஹலிகாப்டரில் பறந்து கவர்னர் ஆய்வு
ADDED : டிச 29, 2024 05:21 AM
புதுச்சேரி: புதுச்சேரி நீர்நிலைகளில் தண்ணீர் சேமித்து குடிநீருக்கு பயன்படுத்துவது தொடர்பாக, ெஹலிகாப்டரில் சென்று கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. நிலத்தடி நீரில் கடல் நீர் புகுந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு உப்புகரிக்கிறது.
எனவே நிலத்தடி நீரை சார்ந்த இருக்காமல் ஆற்று நீரை குடி நீர் திட்டத்திற்கு பயன்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரியில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க சாத்தனுார் அணையில் இருந்து புதுச்சேரிக்கு குழாய் மூலம் 1.50 டி.எம்.சி., தண்ணீர் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தமிழகத்தின் மரக்காணத்தில் பகுதியில் உள்ள கழுவேலி ஏரியில், இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3 டி.எம்.சி., தண்ணீரை குடிநீர் திட்டத்திற்கு கேட்டுள்ளது.
இதற்கிடையில், புதுச்சேரி நீர்நிலைகளில்,தண்ணீர் சேமிப்பு தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன், ெஹலிகாப்டரில் சென்று நேற்று ஆய்வு செய்தார்.
காலை 11:00 மணிக்கு லாஸ்பேட்டை ஏர்போர்ட் மைதானத்தில் ெஹலிகாப்டரில் புறப்பட்ட கவர்னர், முதலில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட காலாப்பட்டு பகுதியை வானில் வட்டமிட்டபடியே ஆய்வு செய்தார்.
கடலில் கற்கள் கொட்டும் பணியைகேட்டறிந்தார்.
தொடர்ந்து, ெஹலிகாப்டரில் பறந்தபடியே அரியாங்குப்பம் ஆறு, சுண்ணாம்பாறு, சங்கராபரணியாறு, தென்பெண்ணையாறு, பாகூர் ஏரி, சுத்துகேணி, பிள்ளையார்குப்பம், ஊசுட்டேரி, புதுச்சேரி நகர பகுதியில் ஆய்வு நடத்தினர்.
விளைநிலங்கள் பரப்பு, பயிரிடப்படாத இடங்கள், தண்ணீர் தேங்கி வைப்பதற்கான சாத்திய கூறு உள்ள இடங்கள் குறித்தும் கேட்டறிந்தார். படுகையணையில் கொள்ளவு, தற்போதைய தண்ணீர் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். 12:00 மணியளவில் மீண்டும் ெஹலிகாப்டரில் லாஸ்பேட்டையைவந்தடைந்தார்.
மழைக்காலத்தில், தென்பெண்ணையாறு, சங்கராபரணியாற்றில் வெள்ளம் பல டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
இந்த தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீரை அதிகரிக்கவும், குடிநீராக பயன்படுத்துவது குறித்தும் அடுத்தடுத்து மெகா திட்டங்கள் பொதுப்பணித் துறை மூலம் தயாராக உள்ளது.

