/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மகளிர் பள்ளியில் இலவச சீருடை வழங்கல்
/
அரசு மகளிர் பள்ளியில் இலவச சீருடை வழங்கல்
ADDED : ஆக 12, 2025 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி அரசு சார்பில், சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சீருடை, தையல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு இலவச சீருடை, தையல் நிதியை வழங்கினார்.
தொடர்ந்து அவர், கடந்தாண்டு பொதுத்தேர்வில் பள்ளியில் நுாறு சதவீதம் தேர்ச்சியளித்த ஆசிரியர்களை கவுரவித்து, வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் ராஜவேலு சுகந்தி , தலைமை ஆசிரியை விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.