/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்
/
லாஸ்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஆக 25, 2025 05:34 AM

புதுச்சேரி: நாதன் அறக்கட்டளை மற்றும் பிம்ஸ் மருத்துவமனை சார்பில் லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை, நாதன் அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் துவக்கி வைத்தார். நடராஜன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில பொருளாளர் நரசிம்மன், பா.ம.க., தொகுதி தலைவர் திருமால், நிர்வாகிகள் காந்தி, பிரபு, காசி, கணபதி முன்னிலை வகித்தனர்.
முகாமில், டாக்டர்கள் ஹரிஷ், கிலாடிஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், எலும்பு, மூட்டு, பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண், மகப்பேறு, குழந்தைகள், தோல், பல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனை அளித்தனர்.
முகாமில் நாதன் அறக்கட்டளை நிர்வாகிகள் திருமால், சுரேஷ், பாலா, வெங்கடேசன், சத்தியா, சுப்புரமணி, ஜெகதீஷ், சுரேஷ்குமார், வழக்கறிஞர் கார்த்தி, விஜய பூபதி, பாலா, விக்னேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.