/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவர்களின் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை நட்புறவு கலைவிழாவில் முதல்வர் உறுதி

ADDED : ஆக 25, 2025 05:32 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவர்களின் சொத்துக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் - பாண்டிச்சேரி சங்கங்கள் கூட்டமைப்பு, புதுச்சேரி சுற்றுலாத்துறையுடன் இணைந்து, பிரான்ஸ் -புதுச்சேரி நட்புறவு கலைவிழா 2025 கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவிற்கு, புதுச்சேரி பிரான்ஸ் நாட்டு துாதர் எட்டியென் ரோலண்ட் பியக், பிரான்ஸ் நாட்டின் எம்.பி. சான்டல் சாமுவேல் டேவிட் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பளராக முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரியில் பிறந்த பலர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்து வருபவர்கள் பலமுறை வள்ளுவர் சிலை, காந்தி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது கண்டிப்பாக பிரான்ஸ் நாட்டிற்கு வருவேன். புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்கு முக்கியமானது. அங்கு வசிக்கும் பலர் புதுச்சேரிக்கு முதலீடு மற்றும் விளம்பரம் செய்வதால் நமது பொருளாதாரம் மேம்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் உற்று நோக்குகின்ற சுற்றுலாதளமாக புதுச்சேரி திகழ்கிறது. பழமையான அழகிய கட்டிடங்கள், வீதிகள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இங்கிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவர்களின் சொத்துக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.