/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது: பரிசீலனையில் 27 பேரின் மனுக்கள் ஏற்பு
/
இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது: பரிசீலனையில் 27 பேரின் மனுக்கள் ஏற்பு
இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது: பரிசீலனையில் 27 பேரின் மனுக்கள் ஏற்பு
இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது: பரிசீலனையில் 27 பேரின் மனுக்கள் ஏற்பு
ADDED : மார் 29, 2024 03:12 AM

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27 ம்தேதியுடன் முடிவடைந்தது.ஒட்டுமொத்தமாக புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட 34 வேட்பாளர்கள் 45 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11:00 மணிக்குமாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் மனுக்கள், உறுதிமொழி பத்திரம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக பரிசீலனை செய்தனர்.
ஒவ்வொரு வேட்பு மனுவில் விவரங்களை குறிப்பிட்டு ஆட்பேசனைகள் ஏதேனும் உள்ளதா என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கேள்விஎழுப்பினார்.எந்தவொரு ஆட்பேசனைகள் இல்லாத மனுக்கள் உடனடியாக ஏற்கப்பட்டன.
பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் வேட்பு மனுவிற்கு, சுயேட்சை வேட்பாளராக நிற்க மனு செய்துள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்சேபனை தெரிவித்தார்.புதுப்பாளையத்தில் உள்ள ஒரு சொத்தை பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை என ஆட்சேபனை தெரிவித்தார்.
ஆனாலும் சுயேட்சை வேட்பாளரின் ஆட்சேபனையை நிராகரித்த மாவட்ட தேர்தல் அதிகாரி,நமச்சிவாயத்தின் மூன்று மனுக்களும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.
இதேபோல் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம்,அ.தி.மு.க.வேட்பாளர் தமிழ்வேந்தன் மனுக்கள் மீது யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
இந்த பரிசீலனையில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், மற்ற கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள், சுயேட்சைகள் தங்கள் சார்பாக வழக்கறிஞர்களுடன் பங்கேற்றனர்.
முறையாக கையெழுத்திடாத,உரிய நபர்கள் முன்மொழிவு செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இதில் பெரும்பாலும் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இறுதியாக பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன் உட்பட 27 வேட்பாளர்கள் சமர்ப்பித்த 36 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ன.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பா.ஜ., காங்., அ.தி.மு.க., ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டதையடுத்து அவர்களின் மாற்று வேட்பாளர்கள் 3 பேர், சுயேட்சைகள் 4 பேர் என 7 பேர் தாக்கல் செய்த 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மதியம் 12.30 மணியளவில் வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்தது.
தேர்தல் போட்டி களத்தில் உள்ள அரசியல் கட்சிகள்,சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட விரும்பம் இல்லையெனில் தங்களது வேட்புமனுக்களை நாளை 30ம் தேதி மாலை 3:00 மணி வரை வாபஸ்பெற்றுக்கொள்ளலாம்.
அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அன்றைய தினம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
ஒரே சின்னத்தை இரு சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டால், அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட உள்ளது.

