/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி கொலை வழக்கு தடயங்கள் தடய அறிவியல் துறையிடம் ஒப்படைப்பு
/
சிறுமி கொலை வழக்கு தடயங்கள் தடய அறிவியல் துறையிடம் ஒப்படைப்பு
சிறுமி கொலை வழக்கு தடயங்கள் தடய அறிவியல் துறையிடம் ஒப்படைப்பு
சிறுமி கொலை வழக்கு தடயங்கள் தடய அறிவியல் துறையிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 16, 2024 06:04 AM
புதுச்சேரி: சிறுமி கொலை வழக்கில் கிடைத்த தடயங்கள், கைரேகை பதிவுகள் சீலிடப்பட்ட உறையில் தடய அறிவியல் துறையில் போலீசார் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி மாயமானார். பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாய்க்காலில் மீட்கப்பட்டது.
முத்தியால்பேட்டை போலீசார் கருணாஸ், 19; விவேகானந்தன், 57; ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயங்கள், பிரேத பரிசோதனையின்போது கிடைத்த தடயங்கள், கைது செய்யப்பட்ட இருவரின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கைதான இருவரின் ரத்த மாதிரிகள், கைரேகை பதிவுகள் சிறைக்குள் சிறப்பு மருத்துவ குழு நேரடியாக சென்று சேகரித்தனர்.
நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
கருணாஸ், விவேகானந்தன் இருவரின் ரத்த மாதிரிகள், கைரேகை பதிவுகள், கொலை செய்யப்பட்ட இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், சிறுமியின் பெற்றோர் ரத்த மாதிரிகள் அறிக்கை, பிரேத பரிசோதனையின்போது கிடைத்த தடயங்களில் உள்ள ஒற்றுமையை கண்டறிய, நீதிமன்ற அனுமதி பெற்று சீல் வைக்கப்பட்ட உறையில் கிருமாம்பாக்கம் தடய அறிவியல் துறையிடம், முத்தியால்பேட்டை போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.

