/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 09, 2024 05:50 AM

பாகூர்: பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சுதா தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சத்தியவாணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் குறித்தும், சட்ட ரீதியாக எதிர் கொள்ளும் பிரச்னைகள், போதை பொருட்களை பயன்படுத்துவோர் மீதான சமுதாயத்தின் பார்வை குறித்து பேசினார்.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் தேவி 'போதை பழகத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். தலைமையாசிரியர் மஞ்சுளா நோக்கவுரையாற்றினார்.
தமிழ் விரிவுரையாளர் கயல்விழி தொகுப்புரையாற்றினார். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பொறுப்பாசிரியர் தனுசு, விரிவுரையாளர் ஜகஹர்லால்நேரு, மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

