/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீயணைப்பு துறை உடல் தகுதி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம்
/
தீயணைப்பு துறை உடல் தகுதி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம்
தீயணைப்பு துறை உடல் தகுதி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம்
தீயணைப்பு துறை உடல் தகுதி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் தகுதி நீக்கம்
ADDED : பிப் 19, 2024 05:10 AM
புதுச்சேரி: தீயணைப்பு பணியிடம் உடல் தகுதி தேர்வில் முறைகேட்டில் ஈடுப்பட்டால் உடனடியாக விண்ணப்பதாரர்கள் வெளியேற்றப்படுவர்.
இதுகுறித்து புதுச்சேரி தீயணைப்பு துறை அலுவலகம் வெளயிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி அரசின் தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி, தீயணைப்பு வீரர், வாகன ஓட்டுனர் உள்ளிட்ட 75 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தேர்வர்களுக்கு உடல் தகுதி தேர்வு வரும் 23ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. உடல் தகுதி தேர்விற்கான அடையாள அட்டை கடந்த 12ந் தேதி முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசின் புகைப்பட ஆதார ஆவண நகல் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும். தேர்வு வளாகத்தில் விண்ணப்பத்தாரர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
முறைகேடுகளில் ஈடுபடுவோர் உடனடியாக வெளியேற்றப்படுவர். மேலும் வருங்கால அரசு பணி ஆள் சேர்ப்புகளில் இருந்தும் தடை செய்யப்படுவார்கள்.
அட்மிட் கார்டு மற்றும் அரசு புகைப்பட அடையாள அட்டை நகல்கள் இல்லாதவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
போதை மருந்துகளை பயன்படுத்தினால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சந்தேக நபர்களின் ரத்த மாதிரியை சேகரிக்கவும், மூச்சு பகுப்பாய்வை மேற்கொள்ளவும் தீயணைப்பு துறைக்கு அனுமதி உண்டு. தகுதி பெற தவறியவர்களுக்கு நிராகரரிப்பு சீட்டு வழங்கப்படும்.
அவர்கள் உடனடியாக மைதானத்தை விட்டு வெளி யேற வேண்டும். அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

