நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.
உள்துறை செயலாளர் கிரண், போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஸ், முன்னாள் ராணுவ நலச்சங்க சந்திரமோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 20 ஆண்டுகள் பணி முடித்த முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தல், அவர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி இடஒதுக்கீடு வழங்கல் உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவர்களுக்கான அரசு சலுகைகள், கூடுதல் நலன் அளிக்கும் திட்டங்கள் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டது.