/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தாங் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு
/
பெத்தாங் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 24, 2025 10:05 PM
புதுச்சேரி; நியூ பெத்தாங் அசோசியேஷனில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிரஞ்சுகாரர்களால் அறிமுகபடுத்தப்பட்டு, பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் , புதுச்சேரி மக்களும் இணைந்து பெத்தாங் போட்டியை விளையாடி வருகின்றனர். நியூ பெத்தாங் அசோசியேஷன் புதுச்சேரி என்ற பெயரில் 42 கிளப்புகள் செயல்பட்டு வருகிறது.
இந்த அசோசியேஷனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக வியோதக்கர் துய்க்ளு, துணைத் தலைவராக வீரராகவன், பொதுச் செயலாளராக கன்னியப்பன், பொருளாளராக சீனிவாசன், செயற்குழு உறுப்பினர்களாக அமர்நாத், நாகராஜ், பீட்டர், ஓனாசிஸ், மார்க், முருகன், பிரவின், துணைச் செயலாளராக வேந்தன் கொலாம், துணைப் பொருளாளராக மதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.