/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., அலுவலகத்துக்கு காங்கிரசார் 'விசிட்' ; ஒற்றுமையாக பாடுபட சிவா உறுதி
/
தி.மு.க., அலுவலகத்துக்கு காங்கிரசார் 'விசிட்' ; ஒற்றுமையாக பாடுபட சிவா உறுதி
தி.மு.க., அலுவலகத்துக்கு காங்கிரசார் 'விசிட்' ; ஒற்றுமையாக பாடுபட சிவா உறுதி
தி.மு.க., அலுவலகத்துக்கு காங்கிரசார் 'விசிட்' ; ஒற்றுமையாக பாடுபட சிவா உறுதி
ADDED : மார் 21, 2024 12:35 AM

புதுச்சேரி, : 'இண்டியா கூட்டணியில் மன சங்கடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என, எதிர்கட்சி தலைவர் சிவா கூறினார்.
இண்டியா கூட்டணியில் புதுச்சேரி தொகுதி காங்., கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,முன்னாள் அமைச்சர் கந்தசாமி, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர், தி.மு.க., அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றனர்.
காங்., நிர்வாகிகளை, எதிர்கட்சி தலைவரும், தி.மு.க., அமைப்பாளருமான சிவா, அவை தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் வரவேற்றனர்.
கூட்டத்தில் சிவா பேசும்போது, 'புதுச்சேரியில் நமது கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி 3 ஆண்டுகள் நடந்தும் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை.அதனால், அக்கட்சியில் இருப்பவரே தேர்தலில் நிற்க பயந்து ஓடுகிறார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தரப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நமது கூட்டணியில் உள்ளவர்களுக்கு மன சங்கடங்கள் இருந்தால் அதை ஒதுக்கிவிட்டு ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, தி.மு.க., துணை அமைப்பாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

