/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கல் முதல்வர் துவக்கி வைப்பு
/
2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கல் முதல்வர் துவக்கி வைப்பு
2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கல் முதல்வர் துவக்கி வைப்பு
2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கல் முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : அக் 07, 2024 06:28 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 70 வழங்கும் 'பசுமை புதுவை' சார்பில், புதுச்சேரியில், 2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழாவை,முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பசுமை புதுவை நிகழ்ச்சியில், புதுச்சேரி மக்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ரவுண்ட் டேபிள் ஏரியா சேர்மன் குணால், செயலாளர் திலீப், ஐ ஹோம்ஸ் பாலாஜி, செண்பகா கார்ஸ் அசோகன் வி.என்.எம்.,ஜுவல்லர்ஸ் வைத்தியநாதன், லோகஸ் யோகி, சூரியன் எப்.எம்., ராஜூ மற்றும் ரவுண்டு டேபிள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ரவுண்ட் டேபிள் 70 சேர்மன் யாக்டோ சதிஷ், செயலாளர் கார்த்திக், பொருளாளர் புருேஷாத்தமன், துணை சேர்மன் அசோக் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர்செய்திருந்தனர்.